தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் நாளொன்றுக்கு 1000 தடுப்பூசிகள் இலக்கு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்காவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி

By

Published : Apr 18, 2021, 12:12 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் 45 வயதுக்குள்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன், மாவட்ட பொறுப்பு ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜவகர்லால் ஆகியோர் தடுப்பூசி முகாமினை ஆய்வுசெய்தனர்.

அப்போது கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அலுவலர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.

மாவட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 58 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த ஏழு லட்சத்து 55 ஆயிரத்து 923 பேரிடமிருந்து ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details