தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைகளை படைத்த பள்ளி மாணவன்! - Kandaberundasana record

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், கண்டபேருண்டாசனத்தில் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

கண்டபேருண்டாசனத்தில் 3 உலக சாதனைகளை படைத்த பள்ளி மாணவன்!
கண்டபேருண்டாசனத்தில் 3 உலக சாதனைகளை படைத்த பள்ளி மாணவன்!

By

Published : Dec 31, 2022, 9:34 AM IST

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர், கண்டபேருண்டாசனத்தில் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் முரளிமோகன் - மோகனலட்சுமி தம்பதி. இவர்களது மகன் ஜித்தேந்தரசாய் (16), அருகிலுள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் ஜித்தேந்தரசாய், ஒரு நிமிடத்தில் 45 முறை கண்டபேருண்டாசனத்தில் தரையில் உருண்டபடி உலக சாதனை படைத்தார். இவரது சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் அசிஸ்ட் உலக சாதனை ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன. சாதனை படைத்த மாணவன் ஜித்தேந்தரசாய்க்கு பலரும் பாரட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு டஃப் கொடுத்த இந்தியர்கள் - முன்னாள் வீரர் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details