திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் மீட்டுள்ளனர். அந்த போலி ரசீதை பயன்படுத்தி பலமுறை அதிக தொகைக்கு நகைகளை அடமானம் வைத்து, பல லட்சம் மோசடி செய்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்கள் நகைகளை மீட்டு அதற்கு மாற்றாக போலி நகைகளை வங்கியில் கொடுத்துள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து தகவலறிந்த வாடிக்கையாளர்கள், ஒருவருக்குப் பின் ஒருவராக வங்கியை நோக்கி வந்தனர்.