தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவர் படைத்த சாதனை! - Govt School Students

திருவள்ளூர்: மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

சதுரங்க போட்டி

By

Published : Aug 16, 2019, 6:42 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செஸ் விளையாட்டு அசோசியேஷன், அச்சாணி செஸ் அகாடமி, புரோ செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 200 பேர் கலந்துகொண்டனர். இதில் எட்டு வயது முதல் 14 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அரசு பள்ளி மாணவர் படைத்த சாதனை!

14 வயது பெண்கள் பிரிவில் ஜெயப்பிரியா, ஆண்கள் பிரிவில் தருண்குமார், 12 வயது ஆண்கள் பிரிவில் மணவாள நகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைபள்ளி மாணவர் ஸ்ரீ சஞ்சய் முகினும், பெண்கள் பிரிவில் ஹெப்சிபா பெரிலும் முதலிடத்தை பெற்றனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பாலயோகி கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details