தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - Land occupation

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த க.கு.கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினார்.

govt-land-occupation

By

Published : May 6, 2019, 4:22 PM IST

திருவள்ளூர் மாவட்டம் க.கு.கண்டிகை கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு, வருவாய்த்துறையினர் பலமுறை நோட்டீஸ் அனுப்பி அப்பகுதியில் வீடு கட்டக்கூடாது எனக் கூறியிருந்தனர். இதைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையையும் மீறி அங்குள்ள மக்கள் ஒரு ஏக்கர் நிலத்ததை ஆக்கிரமித்து பதினோறு வீடுகள் கட்டியுள்ளனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதனால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருத்தணி கோட்டாட்சியர் பவனந்தி தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்த வீடுகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details