62 ஆயிரம் புத்தகங்களுடன் 12,000 உறுப்பினர்களை உள்ளடக்கிய பொது நூலகம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் 1968ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தப் பொது நூலகத்தின் நிலப்பரப்பளவு ஆறு செண்ட் ஆகும்.
ஆனால், இந்த ஆறு செண்ட் இடத்தை முருகன், நாகராஜ், சம்பாலால் ஆகிய நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தரப்பில் பலமுறை தெரிவிக்கப்பட்டும் எந்தப் பயனும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் அரசுத் தரப்பின் மீது கடந்த மாதம் அவசர வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர்.