திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், ஆர்.ஜி.என் நகரில் வசித்து வருபவர் பிரதீஷ்(36). இவருக்கு சுவேதா என்ற மனைவியும், கிருஷிக் நரசிம்மா (8), அத்விக் நரசிம்மா (4) என்ற மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பிரதீஷ் தனது மகன்களின் படிப்பிற்காக சென்னை அண்ணா நகரில் வீடு வாங்கி அங்கு வசித்து வருகிறார். இருப்பினும், பெரியபாளையம் பகுதியில் வீடு மற்றும் விவசாய நிலம் உள்ளதால் இந்த வீட்டில் தங்கி விவசாயம் மற்றும் தொழிலை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதீஷ் தனது நண்பர் அமர் என்பவருடன் கடந்த வியாழக்கிழமை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றிருந்தார். எனவே தனது வீட்டிற்கும், வீட்டுக் காவலுக்கும் உள்ள மூன்று நாய்களை பராமரிக்கவும் இவரது கார் டிரைவர் ராமாபுரம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பிரதீஷ் (23) என்பவர் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், ஏப். 24ஆம் தேதி காலை டிரைவர் பிரதீஷ் வீட்டிற்கு வந்தபோது மயங்கி விழுந்திருந்த மூன்று நாய்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.