தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியாக சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு! - women

திருவள்ளுர்: ஆவடியில் இரு சக்கர வகனத்தில் தனியாக சென்ற பெண்ணை வழிமறித்து 5 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு!

By

Published : Jul 28, 2019, 7:11 PM IST

திருவள்ளுர் மாவட்டம் ஆவடியை அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார். இவரது மனைவி ரேகா (28) அம்பத்தூர், சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சூரப்பட்டு பகுதியில் உள்ள நோயாளி ஒருவருக்கு ஊசி போட இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

அவர் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரது பின்னால் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் தீடீரென வழிமறித்து ரேகா கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து உள்ளார்.

அப்போது ரேகா சத்தமிட அந்த இளைஞர் பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details