திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தியாகாபுரம் கிராமம் அருகில் கல்குவாரி செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இக்குவாரியில் விதிமுறைகளுக்கு மாறாக வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதாகவும், இதனால் ஏற்படும் இரைச்சல் அப்பகுதி மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விதிமுறைகளை மீறி வெடிவைத்ததால் கல் குவாரிக்கு சீல் - Quarry was Seal in thiruvallur
திருவள்ளூர்: கல்குவாரியில் விதிமுறைகளுக்கு மாறாக வெடி வைத்ததால் சோதனையில் ஈடுபட்ட வருவாய்த் துறையினர் 825 கிலோ ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து கல் குவாரிக்கு சீல் வைத்தனர்.
விதிமுறைகளை மீறி வெடிவைத்ததால் விதிகளின் படியை சீல் வைப்பு...
அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வருவாய் துறையினரும் காவல் துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 825 கிலோ ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, அந்த குவாரிக்கு சீல் வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்திவருகின்றனர்.