108 திவ்ய தேசங்களில் ஒன்றாக வைணவர்களால் போற்றப்படும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை மாத பிரமோற்சவ விழா நடந்துவருகிறது. மூன்றாம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு முழுக்கும், அலங்காரம் மற்றும் வழிபாடும் நடந்தது.
தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் காலை 9 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா வந்து அருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.