தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை: மூன்று பேர் கைது! - திருத்தணி

திருவள்ளூர்: திருத்தணி அருகே ரவுடியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

rowdy

By

Published : Jun 8, 2019, 11:42 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுப் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல்(40). லாரி ஓட்டுநரான இவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை என பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் வடிவேல் வழக்கம்போல் லாரி ஓட்டி விட்டு திருத்தணி ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வடிவேலை பட்டப்பகலிலேயே திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை: மூன்று பேர் கைது!

இந்நிலையில், திருத்தணி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று பேரையும் காவல்துறை சுற்றிவளைத்து பிடித்தனர். கைதான மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details