திருவள்ளூர்:பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் மதன். இவர் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளின் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 6) இரவு உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மதனும் வந்தார். இதையடுத்து சொந்த கிராமத்திற்கு திரும்பிய மதனுக்கு, பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.