திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வருமானத்தை நோக்கமாக கொண்டு அவர்கள் தங்களது உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் உழைத்து வருகின்றனர். இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் தாக்கினாலும் அவர்கள் மருத்துவமனையை நாடுவதில்லை.
வடமாநிலத்தவர்கள் நலன்: கும்மிடிபூண்டியில் இலவச மருத்துவமுகாம் - Gummidipoondi
திருவள்ளூர்: உடல்நலத்தில் அக்கறை கொள்ளாமல் உழைக்கும் வடமாநிலத்தவரின் நலனை கருத்தில் கொண்டு கும்மிடிப்பூண்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Free Medical Camp
வடமாநிலத்தவர்களுக்காக கும்மிடிபூண்டியில் இலவச மருத்துவமுகாம்
இதை கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதாரத் துறை, கும்மிடிப்பூண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர்களுக்கு மருத்துவர்கள் உடல்நல பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.