தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிகள் நலனுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மின்விசிறிகள், ஏர்கூலர் வழங்கல்! - Free fan and air conditioner supply for pregnant mothers

திருவள்ளூர்: கர்ப்பிணிகள், குழந்தைகள் நலனுக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்புச் சிகிச்சைப் பிரிவிற்காக 20 மின்விசிறிகள், ஏர்கூலர் வழங்கப்பட்டன.

கர்ப்பிணி தாய்மார்கள்
கர்ப்பிணி தாய்மார்கள்

By

Published : Jun 1, 2021, 6:21 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணூர் கிராமத்தில் வசிக்கும் பிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் நலனுக்காக மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவிற்கு 20 மின் விசிறிகள், ஏர்கூலர் அரசு மருத்துவமனை தலைவர் அரசி, ஆர்எம்ஓ ராஜ்குமாரிடம் வழங்கினர்.

இது குறித்து பிரகாஷ் கூறுகையில், கரோனா தொற்று தாண்டவத்தால் ஏசியின் பயன்பாடு முற்றிலுமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிகள், குழந்தைகளின் வசதிக்காக அவர்களின் உடல்நலம் கருதி தனது சொந்த செலவில் மின்விசிறி, ஏர்கூலர் வழங்கியதாகவும், தங்களால் முடிந்த உதவிகளை மருத்துவமனைக்காகச் செய்ய காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாடு அரசின் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details