திருவள்ளூர்:ஆந்திரா மாநிலத்திலிருந்து வரும் காச்சிகுடா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் தலைமையிலான காவல் துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் இன்று (ஏப்.03) அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காலை 5:30 மணியளவில் ஆந்திராவிலிருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் காச்சிக்குடா விரைவு ரயில் திருத்தணி ரயில் நடைமேதையில் வந்து நின்றது. அப்போது, சோதனையில் ஈடுபட்டுவந்திருந்த ரயிலவே காவல் துறையினர் விரைவு ரயிலில் சோதனை நடத்தினர்.
இதில், ரயிலின் கழிவறையில் இரண்டு பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின் கஞ்சாவை கைபற்றிய ரயில்வே காவல் துறையினர், கைப்பற்றபட்ட கஞ்சா 14 கிலோ எடையுடையதாகவும், கஞ்சா கடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரனை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் ISIS ஆதரவாளர் கைது!