தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டணி கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு இரட்சகர்கள் போல வேடமிடுகிறார்கள் - பொன்னுசாமி - DMK, who intends to cause religious strife

திருவள்ளூர்: திமுக, கூட்டணி கட்சிகள் தாங்கள்தான் இஸ்லாமியர்களுக்கு இரட்சகர்கள் என்பது போல வேடமிட்டு மக்களை தூண்டிவிடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.

ponnusamy
ponnusamy

By

Published : Mar 6, 2020, 9:01 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கும் கூட்டத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருவள்ளூரில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது. பாஜக மட்டும் தான் இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வந்துள்ளது என்று போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் இந்தச் சட்டத்தை படிக்காமல் அரசியலாக்குவதற்காக, அவர்கள் தான் இஸ்லாமியர்களுக்கு இரட்சகர்கள் போல வேடமிட்டு மக்களைத் தூண்டி இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறினார்.

மதக்கலவரத்தை தூண்டும் திமுக

மேலும், தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் துணை போவதாகக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க:எம்எல்ஏக்களை வைத்து குதிரை பேரம் நடத்த மாட்டோம் - மகாராஷ்டிரா அமைச்சர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details