தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' - திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்

திருவள்ளூர்: பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கேட்டுக்கொண்டார்.

thiruvallur
thiruvallur

By

Published : Mar 9, 2020, 10:45 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சிலைதடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, மேற்கு வங்க சுகாதார, பொறியியல் துறை ஆலோசகர் பதம்ஸ்ரீ விருது பெற்ற இந்திரா சக்ரவர்த்தி ஆகியோருக்கும், இசைத்துறை ராதா பாஸ்கர், உயிரி தொழில்நுட்பத்துறை விஞ்ஞானி சோனியா, தமிழ் செவிலியர் கவுன்சில் பதிவாளர் கிரீஸ் கலைவாணி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் போது

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபா ஸ்ரீதேவன், பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள, ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் பேருந்தில் பெண்கள் படும் இன்னல்கள், அலுவலகத்தில் வேலையை முடித்து வீடு திரும்பியபின் குடும்பத்திற்கு வேலை செய்யும் கஷ்டங்கள் உள்ளிட்டவைகளை புரிந்துகொள்ள முடியும். அப்படி ஆண்கள் செய்தால் அதுவே உண்மையான மகளிர் தினம் எனக் கூறினார். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி கிடைக்கவேண்டும், அப்பொழுதுதான் அவர்களால் தடைகளை தாண்டி வாழ முடியும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'பெண்களுக்கு முக்கியம் கல்வியும், பொருளாதார சுதந்திரமும்தான்' - வெங்கையா நாயுடு

ABOUT THE AUTHOR

...view details