பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் வசித்துவந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இரு நாட்களுக்கு முன் அன்பரசு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மகள் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அன்பரசு மரணத்தில் மர்மம் - உடற்கூறாய்வு செய்ய முடிவு
திருவள்ளூர்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் மர்மம் இருப்பதாக மகள் புகார் அளித்ததன் பேரில் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
new
இந்த சந்தேகத்தை போக்க அவரது உடலை உடற்கூறாய்வு செய்து தருமாறு அன்பரசுவின் மகன் அருள் அன்பரசுவும் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்தார்.
அதன்படி அன்பரசு உடலை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.