திருவள்ளூர்:மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு செய்யும் விதமாக, நிர்வாகிகள் கால்பந்தாட்ட போட்டியை நடத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 40 வயதிற்கு மேற்பட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி மநிம நிர்வாகி எஸ். டி மோகன் தலைமையிலும், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ஆனந்த் குமார் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யம் மண்டல செயலாளர் கமீலா நாசர் இளைஞர் அணி செயலாளரும் திரைப்பட பாடலாசிரியருமான சினேகன், மாநில செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு கால்பந்தாட்ட போட்டியை தொடங்கி வைத்தனர்.
கமல்ஹாசன் பிறந்தநாள் விழா: கால்பந்தாட்ட போட்டி நடத்திய நிர்வாகிகள் இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களுக்காக பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், இந்த கால்பந்தாட்டப் போட்டியில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் மோதின. இந்த அணியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் இடம், இரண்டாம் இடம் என்ற முறையில் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.