ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று (செப்டம்பர் 14) நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு பாலத்தை கடந்தது.
ஆந்திர மாநிலத்திலிருந்து தண்ணீர் திறப்பு: திருவள்ளூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் பள்ளிப்பட்டு வட்டங்களைச் சேரந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
Collector gave flood warning
தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 15) காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அக்கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது.
மேலும், வருவாய்துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.