தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் சரிந்து விழுந்தது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 18, 2022, 10:08 AM IST

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் சுற்றுவட்டாரங்களில் தொடர் கனமழை பெய்துவருவதால் அம்மா பள்ளி அணையில் இருந்து நேற்றிரவு (செப்.17) 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக திருத்தணி கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

இதனால் ஐ.வி. பட்டறை, சானா குப்பம், பள்ளிப்பட்டு, சுரக்காய் பேட்டை, போன்ற பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் நெடியும் கிராமத்தின் ஆற்றுப் பாலம் முற்றிலும் சேதமடைந்தது. அதன்பின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மணல் திட்டு பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த வந்தனர். அந்த தற்காலிக பாலமும் நேற்று வெள்ளத்தில் சரிந்துவிழுந்தது.

இதனால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே பாலத்தை புதுப்பித்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தரைப்பாலத்திற்காக மக்கள் 25 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பிகார் தொழிலாளியை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் கைது...விசாரனையில் திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details