இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.
எல்லையில் பனி முகடுகளிலும், அடர்ந்த காடுகளிலும், நம்மை காத்து நிற்கும் படையினரின் நலனுக்காக இந்த நாளின் நிதி திரட்டப்படுகிறது. போரின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வது, ராணுவ வீரர்களுக்கும் (Indian Army) அவர்களது குடும்பத்தினருக்கும் கடினமான சூழ்நிலையில் உதவுவது, உடல் உறுப்புக்களை இழந்த வீரர்களின் மறு வாழ்வு பணி, ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் ஆகியவற்றுக்காக இந்த நாளில் நிதி திரட்டப்படுகிறது,