தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் செல்பவர்களிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு; வழிப்பறி கும்பல் கைது! - thieves arrested

சாலையில் செல்பவர்களிடம் கைவரிசை காட்டிவந்த ஐந்து பேர் கொண்ட வழிப்பறி கும்பலைக் காவல் துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

By

Published : Jul 8, 2020, 3:49 PM IST

திருவள்ளூர்: தொடர்வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

செங்குன்றத்தைச் சேர்ந்தவர் பைராகி (38). வடமாநிலத்தைச் சேர்ந்த இவர் அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இச்சூழலில், நேற்று முன்தினம் இவர் கடைவீதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பைராகியை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அரிவாளால் பைராகியின் தலையில் வெட்டிவிட்டு, அவரிடமிருந்த 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியது. வழிப்பறி கும்பல் தாக்கியதில் மயக்கமடைந்து சாலையில் விழுந்துகிடந்த பைராகியை, அப்பகுதியில் நடந்துசென்ற சிலர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பைராகி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல் துறையினர், சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை மாதாவரத்தைச் சேர்ந்த சுரேந்தர்(21) ரூபேஷ்(25), கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த சரண்(19), பாரதி(20) விஜய்(21) ஆகியோர் இவ்வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் தொடர்ந்து சாலைகளில் தனியாக நடந்துசெல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களைக் கத்திமுனையில் வழிமறித்து, அவர்கள் அணிந்திருக்கும் நகை, கைபேசி, பணம் ஆகியவற்றைத் திருடிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

நடிகர் விஷாலின் கணக்காளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!

இதனையடுத்து ஐந்து பேரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details