தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டன் லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர் கைது: ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் - கும்மிடிப்பூண்டியில் காட்டன் லாட்டரி விற்பனை

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர்
லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர்

By

Published : Nov 5, 2020, 10:25 AM IST

திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில், தனிப்படை காவல் துறையினர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் காட்டன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக நேற்று (நவ.,4) தனிப்படை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கும்மிடிப்பூண்டி விரைந்த தனிப்படை காவல் துறையினர் பெண் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். கைதானவர்களிடருந்து 7 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஏழுமலை (47), ஜெகநாதன் (46), குமார் (46), விஜயகுமார் (36), செல்வி (35) என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணியில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details