திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் காய்ச்சலால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சிறுசிறு கிளினிக், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பயிலாதவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் இந்தச் சூழலில் பெரியபாளையம், ஆரம்பாக்கம், மீஞ்சூர் ஆகிய பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவர் போல் சிலர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர் என்று சுகாதரத்துறையினர் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர்கள் திலகவதி, ராஜேந்திரன், நீலகண்டன், ஜீவ தரக் ராமராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த தகவல் அறிந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள போலி டாக்டர் ராமச்சந்திரனை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.64.72 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்