திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் ஏசு (42), சர்மிளா (38) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மண்ணெண்ணை விளக்கை ஏற்றி வைத்து விட்டுக்கு வெளியே வந்து தூங்கினர்.
திடீரென குடிசை வீடு கொழுந்துவிட்டு எரிந்ததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஏசு, சர்மிளா தம்பதி தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீ கட்டுக் கடங்காத காரணத்தால், தேர்வாய் கண்டிகையிலுள்ள தீயணைப்பு படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.