தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து - tiruvallur district news

திருவள்ளூர்: பாகல்மேட்டில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர்.

சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து
சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து

By

Published : Oct 6, 2020, 7:18 PM IST

Updated : Oct 6, 2020, 7:23 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வெங்கல் அடுத்த பாகல்மேட்டில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதன் பணியாளர்கள் நித்தியானந்தம் (27), மணிகண்டன் (24) ஆகியோர் பலத்த தீ காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்வாய் கண்டிகை, செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் வாகனத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் அவர்கள் தீக்காயம் ஏற்பட்ட பணியாளர்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாலை போடும் பணியில் ஈடுபட்ட வாகனத்தில் தீ விபத்து

மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பைக்கை கொளுத்திய இரண்டு பெண்கள் யார்? போலீஸ் விசாரணை

Last Updated : Oct 6, 2020, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details