தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூடப்பட்ட தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 6 ஏக்கர் தைல மரங்கள் எரிந்து நாசம்!

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பத்தில் இயங்கி வரும் தனியார் மின் உற்பத்தித் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிப்காட் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

By

Published : Jun 3, 2021, 6:07 AM IST

தனியார் மின் உற்பத்தி நிலையத்தில்  தீ விபத்து
தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த குருராஜா கண்டிகை ஊராட்சிக்குள்பட்ட பில்லாகுப்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட காவேரி (தனியார்) மின் உற்பத்தித் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சுமார் ஆறு ஏக்கருக்கும் மேலான தைல மரங்கள் எரிந்து நாசமாகின.

இது குறித்து காவலாளி ராமன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் நிலைய தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தும் மளமளவென பரவிய தீயால் வீரர்களின் முயற்சிக்கு அதிக வேலை இருந்தது. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல் துறையினர் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details