திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில் அடிக்கடி தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று (ஜன.18) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.