திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் 20க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் புகைமண்டலம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பறிமுதல் வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்..! - redhills
திருவள்ளூர்: செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் வாகனங்கள் தீ விபத்தில் எரிந்து நாசமாயின.
பறிமுதல் வாகனங்கள்
ஆனால், இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் எரிந்த நாசமாயின. பின்னர் இதுகுறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.