ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (49) என்பவர் நேற்று (ஜூன் 8) மாலைகண்டெய்னர் லாரியை ஓட்டிவந்தார்.
அப்போது கண்டெய்னர் பழுதானதால் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள வாகனங்கள் பழுதுநீக்கும் இடத்திற்கு லாரியை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, உயர் அழுத்த மின்சார வயர் மீது உரசியதில் கண்டெய்னர் டயர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்திலிருந்து கீழே இறங்கிவிட்டார். இந்தத் தீயானது அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு லாரி, இருசக்கர வாகனத்திற்கும் பரவியதில் மூன்று வாகனங்களும் தீப்பிடித்து மளமளவென எரிந்தன.