திருவள்ளூரில் எல்ஐசி அலுவலகம் அருகே தமிழ்செல்வி என்பவருக்குச் சொந்தமான கொட்டகையால் அமைக்கப்பட்ட உணவகம் இருந்தது. இந்த உணவகத்தில் நேற்று திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. இந்தத் தீயானது அருகே இருந்த வேப்பமரத்திலும் பற்றியெரிந்து சுமார் 30 அடி உயரத்திற்கு ஜுவாலையாக மேலெழுந்தது.
திருவள்ளூரில் 30 அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்த தீ! - திருவள்ளூர்
திருவள்ளூர்: எல்ஐசி அலுவலகம் அருகே கொட்டகையால் அமைக்கப்பட்ட உணவகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீஎல்ஐசி கட்டடத்திற்கு பரவாமல் கட்டுப்படுத்தினர். ஓலைக் கொட்டகை உணவகத்திலிருந்த மின்விசிறி, அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிகரெட்டை பிடித்து நெருப்புவைத்து இருக்கலாம் என தெரியவருகிறது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.