திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் குரோம்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பழைய நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் கிடங்கு செயல்பட்டுவருகிறது.
இந்தக் கிடங்கிலிருந்து இன்று (செப். 24) காலை திடீரென புகை அதிகளவில் ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தக் கிடங்கில் முழுவதும் பழைய நெகிழிப் பொருள்கள் இருந்ததால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.