தமிழ்நாடு அரசு நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்து, அதற்கு மாற்றுப் பொருள்களையும் அறிவித்து அதைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் வணிகர்களுக்கு எச்சரித்திருந்தது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் சந்தானம் லட்சுமி டிரேடர்ஸ் என்ற மொத்த விற்பனைக் கடையை ஆய்வு செய்தார்.