தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2020, 7:47 PM IST

ETV Bharat / state

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு இறைச்சி விருந்து!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு இறைச்சியுடன் விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

இறைச்சி விருந்து
இறைச்சி விருந்து

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழ்நாடு அரசு ரூ.420 கோடியில் ஈசாராஜன் ஏரியுடன் தேர்வாய் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு நீர்த்தேக்கத்தை சுற்றி சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பில்லாமல் இருந்தன.

இந்நிலையில், நீர்த்தேக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது இயற்கை வளத்தை பேணும் வகையில் மரக்கன்றுகளை பராமரிக்க ஆணையிட்டார்.

இதனையடுத்து திட்ட இயக்குநர் லோகநாயகி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு தேவன், கௌரி அறிவுறுத்தலின்படி கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமியின் ஏற்பாட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகள் இன்று (அக். 21) நிறைவுபெற்றதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஏற்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட நூறுநாள் பணியாளர்களுக்கு இறைச்சியுடன் கூடிய விருந்து வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கிடா விருந்துக்கு சென்ற 46 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details