திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சீனில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(103). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு, எத்திராஜ், சீனிவாசன் என்ற 2 மகன்களும், செண்பகவல்லி, நிர்மலாதேவி, காமாட்சி, கெஜலட்சுமி, தெய்வநாயகி என்ற ஐந்து மகள்களும் உள்ளனர்.
பரசுராமனுக்கு சொந்தமாக சென்னீர்குப்பத்தில் உள்ள 300 சென்ட் நிலத்தை ஐந்து மகள்களுக்கும் 300 சதுர அடி வீதமும், மீதமுள்ள சொத்தை மகன்கள் பெயரிலும் கடந்த 2008ஆம் ஆண்டு முறைப்படி பத்திர பதிவு செய்துள்ளார்.
சகோதரிகள் பெயரில் எழுதப்பட்ட சொத்தை போலி ஆவணங்கள் மூலம் 2011ஆம் ஆண்டு எத்திராஜ், சீனிவாசன் தங்களது பெயர்களில் எழுதிக்கொண்டனர்.
இதனையறியாத, பரசுராமன் கடந்த 2017ஆம் ஆண்டு மகள்கள் பெயரில் எழுதி வைத்த சொத்துக்கான பட்டா வாங்குவதற்காக சென்று பார்த்தபோது அனைத்து சொத்துக்களும் மகன்கள் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது.