தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - இரு வேறு சர்வே எண்களில் தனித்தனியாக நிலம்

கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக நடைபெற்ற பத்திர பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 26, 2022, 11:04 AM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவளம்பேடு ஊராட்சி தாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் நாயுடு. இவருக்கு உமா என்ற மகளும் மண்ணையா என்ற மகனும் உள்ள நிலையில், இவர்களிடையே மாதவன் நாயுடு பெயரில் இரு வேறு சர்வே எண்களில் தனித்தனியாக நிலம் உள்ளது.

இந்நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் அக்கா தம்பி இடையே ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு பொன்னேரி நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் இரு வேறு இடங்களில் உள்ள நிலங்களை தலா 37 சென்ட் சரிசமமாக பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து ஒரு தனி நபருக்கு 37 சென்ட் நிலத்திற்கு பவர் வழங்கிய மண்ணையா அந்த பவரையும் ரத்து செய்யாமல் நேற்று முந்தினம் இரவு சுமார் 10:30 மணிக்கு மேல் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து நேற்று காலை சார் பதிவாளர் அலுவலகத்தில் செய்த பத்திர பதிவு ரத்து செய்யுமாறு மாதவன் நாயுடுவின் மகள் உஷா புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என சார் பதிவாளர் கூறியதால் இருதரப்பினரையே வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஜெ அருள் தலைமையில் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக புகார் அளிக்குமாறும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமரசம் செய்து வைத்தனர்.

இதையும் படிங்க: சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்...அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details