திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது விளைநிலங்களை வழங்கி பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தவர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கக்கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தனியார் தொழிற்சாலை தொடங்க நிலங்களை வழங்கிய விவசாயிகள் போராட்டம்! - Venkatathur Private Car Factory
திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தொழிற்சாலைக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
![தனியார் தொழிற்சாலை தொடங்க நிலங்களை வழங்கிய விவசாயிகள் போராட்டம்! தனியார் தொழிற்சாலை தொடங்க நிலங்களை வழங்கிய விவசாயிகள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:45:47:1596024947-tn-trl-02-arpattam-vis-scr-7204867-29072020164511-2907f-1596021311-833.jpg)
தனியார் தொழிற்சாலை தொடங்க நிலங்களை வழங்கிய விவசாயிகள் போராட்டம்
ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலாளர் ரவி தலைமையிலான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மணவாள நகரக் காவல் துறையினர் கைதுசெய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.