தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் மனு! - மின்சார திருத்தச்சட்டம் 2020

திருவள்ளூர்: ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யும் ஆபத்தை விளைவிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்ககத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Farmers petition for revocation of electricity bill
Farmers petition for revocation of electricity bill

By

Published : Jun 9, 2020, 1:37 AM IST

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மின்சார திருத்த சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விவசாய சங்கங்களின் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், ”புலவர் பெருந்தகை நாராயணசாமி தலைமையிலான போராட்டத்தில் 63 பேரை பலி கொடுத்துப் பெற்ற இலவச மின்சாரத்தை மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ கொண்டு மத்திய அரசு பறிக்கிறது. மேலும் ஒரு குதிரைத்திறன் பயன்பாடு கொண்ட மோட்டார் வைத்து ரூ. 20000 வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் என விவசாயிகளை நிர்ப்பந்திக்கிறது.

ஏற்கனவே நீர் பற்றாக்குறை மற்றும் உரிய விளைச்சல் இல்லை, பொருளுக்கு உரிய விலை இல்லை என பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த இச்சட்டம் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில அரசு இச்சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details