திருவள்ளூர் மாவட்டத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் வித்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் உதவி இயக்குனர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் பரத், வேளாண் கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகள் குறைகளை கேட்டறிந்து அதற்குரிய தீர்வு எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், புன்னப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், கிராமத்தில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்றும் தாழ்வாக இருக்கக் கூடிய மின் கம்பிகளை மாற்றித் தருமாறும் வருவாய் கோட்ட அலுவலரிடம் கோரிக்கை விடுத்தார்.