திருவள்ளூர் மாவட்டம் சென்ராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (55). இவர் தனது கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்க அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது, உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அறியாமல் அதை மிதித்த துரைசாமி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீவனம் சேகரிக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! - மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
திருவள்ளூர்: சென்ராயன்பாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னலூர் பேட்டை காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஐந்து நிமிடம் மழைக்கு, ஒரு நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றோம். மாவட்ட நிர்வாகமும் மின்சாரத் துறையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு உயர்மின் அழுத்த கம்பிகள் தாழ்வான பகுதிகளில் தொங்குவதை சரி செய்து, உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.