திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன மாங்காட்டில் வசித்து வருபவர் தேவராஜ். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சுண்ணாம்பு குளத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் தனது மகள் ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள தனது உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
அப்போது, முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறுமி யாருடனோ திருமணம் செய்துகொண்டதாக பெரற்றோரிடம் வதந்தியை கிளப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த தேவராஜ்-குப்பம்மாள் தம்பதியர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த ஆறு பேர் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பஞ்சாயத்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
ஆனால், சின்ன மாங்கோடு கிராம நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து பாணியில் கிராமத்தை அவமதித்ததாக கூறி தேவராஜ்-குப்பம்மாள் குடும்பத்தினருடன் கிராமத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும், கிராமத்தில் உள்ள பெட்டி கடையில் மளிகை பொருள்கள் வழங்கக் கூடாது, குடிநீர் வழங்க கூடாது என பல நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த கட்டுப்பாடுகளை சகித்துக்கொண்டு 40 நாள்கள் காத்திருந்த தேவராஜ்-குப்பம்மாள் தம்பதியர் ஒரு கட்டத்தில் கிராமத்தினருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிராம நிர்வாகிகள், கிராமத்தை மீறி வழக்கு தொடர்ந்ததால் சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேரும் கிராம நிர்வாகிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.