திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி 1-வது வார்டில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ”தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், கொடி கம்பங்கள், சுவரொட்டிகள் 6200 அகற்றப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 90 இடங்களில் உள்ள 282 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை, இதில் ஆவடி மாநகராட்சியில் 18 இடங்களில் 70 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை.
Local body election - 2022:திருவள்ளூரில் பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்பு 6 நகராட்சிகளிலும் 41 இடங்களில் 133 மையங்கள் பதற்றமானவையாகவும்,8 பேரூராட்சிகளில் 31 இடங்களில் 79 மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
1 மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது”என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவத்தார்.
இதையும் படிங்க:ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!