திருவள்ளூர்: கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. மூன்று நாள்களுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியில் முதற்கட்டமாக 500 கனஅடி நீரும், அடுத்தபடியாக 1000 கனஅடி நீரும் பின்னர் 2000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மழை சற்று குறைந்த நிலையிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.