திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சத்தரை கிராமத்தில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி. ரமணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை, ஊராட்சி மன்றம் சார்பில் கிராம மக்கள் ஆளுயர மாலை அணிவித்தும் நிகழ்ச்சி நடைபெறும் இடம்வரை பெண்கள் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர்! - புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை அவர் வழங்கினார். மேலும், பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் கற்போம், எழுதுவோம் திட்டத்தையும் தொடங்கிவைத்து, கல்வி கற்காத 20 நபர்கள் கற்பதற்கான புத்தகங்களை வழங்கி கல்வி கற்கவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில், கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சூரகாபுரம் சுதாகர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக நிவாரணம்