தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவாசிய பொருள்கள் வழங்கல் - Tiruvallur District News

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பங்களுக்கு அத்தியாவாசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கல்
கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு வழங்கல்

By

Published : Jun 5, 2021, 9:59 PM IST

திருவள்ளூர்: கடந்த 35 ஆண்டுகளாக சமூக பணி செய்து வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், பூண்டி ஒன்றியத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினை சில்ரன் பிலீவ், அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கரோனா பெருந்தொற்று குறித்தும், தடுப்பூசி குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிமீட்டர், தெர்மாமீட்டர் போன்ற கருவிகளையும் கிராமப்புற தன்னார்வலர்களுக்கு அண்மையில் வழங்கியது.

தொடர்ந்து, சமுதாய குழுக்கள், ஊராட்சிகள் மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பம், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் குடும்பம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோரின் குடும்பம், மாற்றுத்திறனாளிகளின் குடும்பம், பெண்களை தலைமையாக கொண்ட குடும்பம், மிகவும் வறுமையில் வாழும் 600 குடும்பங்கள் கண்டறியப்பட்டன.

அந்தக் குடும்பங்களுக்கு தொண்டுநிறுவனம், சில்ரன் பிலீவ் நிறுவனம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து அரிசி, துவரம்பருப்பு போன்ற பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியது. இந்நிகழ்வு திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரணம்!

ABOUT THE AUTHOR

...view details