எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். அரசு நிர்ணயித்தபடி 150 தொழிலாளர்களை முழுவதுமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களது குடும்பத்தினருடன் துறைமுகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறைமுக தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்..! - ennore port
திருவள்ளூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட துறைமுக தொழிலாளர்கள் ஏராளமானோர், மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள்
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் கலந்து கொண்டார்.
அப்போது, தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரித்தனர்.