தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் கைது - அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் கைது

பழவேற்காடு அரசு மருத்துவமனையில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க 30,000 லஞ்சம் பெற்ற மருத்துவ மனை ஊழியர் மற்றும் மருத்துவமனை உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

Employees who took bribes arrested at Palavekadu Government Hospital
Employees who took bribes arrested at Palavekadu Government Hospital

By

Published : Mar 30, 2023, 11:11 PM IST

திருவள்ளூர்: பழவேற்காடு அரசு மருத்துவ மனையில் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மருத்துவமனை ஊழியர் மற்றும் மருத்துவமனை உதவியாளர் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மருத்துவமனை ஊழியர் லஞ்ச பணம் கேட்டு இருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர், சங்கர். பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களுக்கான சான்று வழங்கிட பழவேற்காடு மருத்துவ மனை ஊழியர் லோகேஷ் சுமார் 1லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

உடல்நலம் சரியில்லாத தமது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் வேண்டும் என மருத்துவர் சங்கர் மன்றாடி கேட்டும் பணத்தை கொடுத்தால் மட்டுமே சான்று வழங்க முடியும் என லோகேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் மருத்துவர் சங்கர் இது தொடர்பாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் மருத்துவர் சங்கர் பழவேற்காடு மருத்துவ மனையில் ரசாயனம் தடவிய ரூ. 30,000 பணத்தை லோகேஷ் உதவியாளர் ரமேஷிடம் வழங்கினார்.அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்தியதில் மருத்துவமனை ஊழியர் லோகேஷிற்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதையடுத்து லோகேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து 5 மணி நேரம் நடத்திய விசாரணையின் முடிவில் லஞ்சம் வாங்கி கொடுத்த மருத்துவமனை உதவியாளர் ரமேஷையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.லஞ்சம் பெறுவதற்கு முன்பாக ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ மனை ஊழியர் லஞ்ச பணம் கேட்டு இருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details