திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் கொடுக்கப்படாததால் நிர்வாகத்தினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.