தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் - உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

election squad confiscated one lakh rupees from Andhra Pradesh
election squad confiscated one lakh rupees from Andhra Pradesh

By

Published : Mar 16, 2021, 11:26 AM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திகுப்பம் கூட்டுச் சாலையில் உதவி வேளாண் துறை அலுவலர் கார்த்திக் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம், தெனாலிலிருந்து சொகுசு காரில் வந்துகொண்டிருந்த சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ராஜன் (52) என்பவரை சோதனை செய்தனர். அதில், அவர் எவ்வித ஆவணங்களுமின்றி ஒரு லட்ச ரூபாய் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் துணை அலுவலர் மகேஷிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details